ஓபிஎஸ் - இபிஎஸ் ஏரியாவில் சவுண்டு கூட்டும் சசிகலா
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தற்போது இயங்கி வரும் நிலையில் கட்சியை கைப்பற்றும் நோக்கில் சசிகலா அதிமுக தொண்டர்களை அழைத்து பேசிவருகிறார். சசிகலா தொண்டர்களிடம் பேசும் வீடியோ தினமும் வெளியாகி வருகிறது.
அதிமுகவுக்குள் இன்னும் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்ட சசிகலா இதை தொடர்ந்து செய்கிறார். இதில் ஓபிஎஸ், இபிஎஸ் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியிலும் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டி வருகிறார்.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் பகுதி நிர்வாகிகளுடன் பேசியதால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். சி.செல்லத்துரை சேலம் புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், ஆர்.பாலாஜி தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் கொங்கணாபுரம் ஒன்றியம், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (மாவட்ட மீனவர் பிரிவு முன்னாள் செயலாளர்) மீனா தியாகராஜன் (நரசிங்கபுரம் நகர கழக மாவட்ட பிரதிநிதி) தியாகராஜன் (நரசிங்கபுரம் நகர 11-வது வார்டு கழக செயலாளர்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment