எடப்பாடியின் பிடி நழுவுகிறதா? ஆரம்பமானதா சசிகலா அலை? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

எடப்பாடியின் பிடி நழுவுகிறதா? ஆரம்பமானதா சசிகலா அலை?

எடப்பாடியின் பிடி நழுவுகிறதா? ஆரம்பமானதா சசிகலா அலை?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தாலும் பிரதான எதிர்கட்சி என்ற கௌரவமான இடத்தை பெற்றுள்ளது அதிமுக. இருப்பினும் கூட்டணியில் சேர்ந்து கொண்டு 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை மட்டும் வென்ற பாஜக தமிழ்நாட்டில் திமுகவுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என கூறி வருகிறது.
சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக தமிழக அரசியல் திமுக, அதிமுக என்ற இரு புள்ளிகளுக்கு இடையேதான் சுழன்று வருகிறது. அப்படியிருக்க கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கட்சி தங்களை ஓரம் கட்டிவிட்டு திமுகவோடு இனி நாங்கள் தான் மல்லுக்கட்டுவோம் என கிளம்பியிருப்பது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது. இனியும் நாம் சும்மா இருந்தால் அவ்வளவு தான் என நினைத்தார்களோ என்னவோ திமுகவுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்து இன்று களத்து வந்துவிட்டனர்.

திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு ரத்து என்னாச்சு, 1000 ரூபாய் உரிமைத் தொகை என்னாச்சு என கோஷங்கள் எழுப்புகின்றனர். ஒவ்வொரு ஊர்களிலும் இந்த போராட்டம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விசாரித்தோம்.

தமிழகத்தில் என்றைக்குமே நாங்கள் தான் திமுகவுக்கு மாற்று என சொல்லும் விதமாக அதிமுக இந்த போராட்டத்தை தொடங்கியிருந்தாலும் அதன் முழு சக்தியை போராட்டத்தில் பார்க்க முடியவில்லை என்கிறார்கள்.



தேர்தல் சமயத்தில் சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த போது அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்றார்கள். ஆனால் சசிகலா ஆடியோ வெளியிட்டு பேசிவரும் நிலையில், தொலைக்காட்சிகளில் தோன்றி தனது அனுபவத்தை, தனது தரப்பு நியாயத்தை கூறிவரும் நிலையில் அது அதிமுக தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.

ஓபிஎஸ் சைலண்டாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு அலை உருவாகியுள்ளது என்கின்றனர். அத்துடன் டெல்லியிலும் சசிகலா இணைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் அதிமுகவில் பெரிய மாற்றம் நடைபெறப் போகிறது என்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad