டிஜிபி கொடுப்பாரா? சைலேந்திர பாபுவுக்கு எதிராக ஸ்டாலினிடம் புகார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

டிஜிபி கொடுப்பாரா? சைலேந்திர பாபுவுக்கு எதிராக ஸ்டாலினிடம் புகார்!

டிஜிபி கொடுப்பாரா? சைலேந்திர பாபுவுக்கு எதிராக ஸ்டாலினிடம் புகார்!

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் தமிழகக் காவலர்கள், தங்களது காவலர் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு இலவசமாக பயணிப்பார்கள். பணி நிமித்தமாக அவர்கள் செல்லாவிட்டாலும் இதுபோன்ற வழக்கம்தான் உள்ளது. ஆனால், பணி நிமித்தமாக செல்லும்போது கூட, வாரண்ட்டுகள் இருந்தால் மட்டும்தான் அவர்களால் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும். இதுதொடர்பாக, காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீதுகள் மூலம் காவல்துறையில் இருந்து போக்குவரத்துத்துறை பணம் வசூலித்துக் கொள்ளும்.

இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் சீருடை அணியாத காவலர் ஒருவர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக நடத்துநருடன் நடத்திய வாக்குவாதத்தில் அந்த நடத்துநர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரனை நடத்திய மனித உரிமைகள் ஆணையம், தமிழக காவல்துறை தலைவருக்கு சில பரிந்துரைகளை செய்தது.


அதனடிப்படையில், “அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் காவலர்கள் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிப்பதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும்” என்று டிஜிபி ஒரு புதிய உத்தரவை போட்டு சுற்றறிக்கை அனுப்பினார்.

ஆனால், காவலர்கள் மத்தியில் இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து, டிஜிபியின் சுற்றறிக்கை கடைநிலை காவலர்களின் உணர்வுகளை அறியாமல் போடப்பட்டிருக்கிறது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில காவலர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.



மதுரையில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக செல்லும் காவலர்களின் வாரண்டுகளை பேருந்துகளில் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் யார் கொடுப்பார்கள் என்று கேள்வி எழுப்பும் காவலர்கள், காவல்துறை உயரதிகாரிகள் எங்கு போனாலும் பயணிக்க கார் வசதி, ஓட்டுநர் இருக்கிறார்கள். அரசு பணத்தில் எரிபொருளும் நிரப்பிக் கொள்வார்கள். ஆனால், கடைநிலைக் காவலர்கள் எங்கு செல்வார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad