செல்ஃபி எடுத்த யாஷிகா: 'சி.எம்'. ஸ்டாலினே இப்படி செய்யலாமானு கேட்கும் நெட்டிசன்ஸ்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு சைக்கிள் ஓட்டுவது என்றால் பிடிக்கும். ஃபிட்டாக இருக்கும் அவர் நேரம் கிடைக்கும்போது சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார். அப்படி அவர் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவரை பார்த்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
முதல்வரை பார்த்துவிட்டு எப்படி சும்மா வருவது என்று, ஸ்டாலினுடம் சேர்ந்து செல்ஃபி எடுத்தார் யாஷிகா. செல்ஃபி எடுத்தால் அதை போனிலேயே வைத்திருப்பது நியாயம் இல்லை என்று ட்விட்டரில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் ஷேர் செய்து கொண்டார்.
யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் சொல்லி வைத்தது மாதிரி ஒரேயொரு கேள்வியை தான் கேட்டுள்ளனர். அதாவது, கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நேரத்தில் ஒரு முதல்வரே மாஸ்க் இல்லாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் இருக்கலாமா என்று கேட்டுள்ளனர்.
சார், நீங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது நீங்களே மாஸ்க் அணியவில்லை என்றால், உங்களை காரணம் காட்டி பலரும் மாஸ்க் அணிய மாட்டார்கள். அதனால் தான் கேட்கிறோம் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
யாஷிகாவின் ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது,
சூப்பர் யாஷுமா. முதல்வருடன் செல்ஃபி, வேற லெவல் நீங்க. அடுத்து முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment