கிட்ட நெருங்கிட்டோம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

கிட்ட நெருங்கிட்டோம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட் நியூஸ்!

கிட்ட நெருங்கிட்டோம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட் நியூஸ்!

தமிழகத்தில் தினசரி புதிய பாதிப்புகள் தொடர்ச்சியாக குறைந்து கொண்டிருக்கிறது. கடந்த திங்கள் அன்று 3,715 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 3,479 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை 54ல் இருந்து 73ஆக அதிகரித்துள்ளது. தற்போது 34,477 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகப்படியான பரிசோதனைகள்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாள்தோறும் 1.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்றை தடுக்கும் வழிமுறைகளை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது. முகக்கவசம், போதிய சரீர இடைவெளி ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இரண்டாவது அலையின் முடிவு

மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர்(407), ஈரோடு(311), சேலத்தில்(228) புதிய பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. குறைந்தது 24 மாவட்டங்களில் இரண்டு இலக்க எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. 12 மாவட்டங்களில் பூஜ்ய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது.

கருப்பு பூஞ்சைக்கு முன்னேற்பாடுகள்

தமிழகத்தில் மொத்தம் 3,300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விரைவாகவே குணமடைந்து விட்டனர். இருப்பினும் பூஞ்சை தொற்றால் 122 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 7,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad