தமிழ்நாட்டை மூணா பிரிக்கணுமாம்... புதுசா கொளுத்திப் போடும் அர்ஜு்ன் சம்பத்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

தமிழ்நாட்டை மூணா பிரிக்கணுமாம்... புதுசா கொளுத்திப் போடும் அர்ஜு்ன் சம்பத்!

தமிழ்நாட்டை மூணா பிரிக்கணுமாம்... புதுசா கொளுத்திப் போடும் அர்ஜு்ன் சம்பத்!


நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி முருகானந்தம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்திக்க வருகை தந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எந்த திட்டங்களும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை. தென்மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில் தற்போது அது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

கொங்கு மாநிலம் அமைய வேண்டும் என்ற கருத்தும் தற்போது வலிமை பெற்றுள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் பிரிவினை வாதம் இல்லை. மாநிலத்தை சிறியதாக பிரித்தால் அதனை நிர்வாகம் செய்ய வசதியானதாக இருக்கும். நிர்வாக வசதிக்காகதான் மாநில பிரிப்பை கேட்கிறோம். வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டுதான் மாநில பிரிவினை முன்னெடுக்கப்படுகிறது.

தென்மாவட்டங்களின் வளர்ச்சி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் தேசவிரோத சக்திகள் ஊடுருவி வளர்ச்சியை தடை செய்கின்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

தென்மாவட்டங்களின் வளர்ச்சி, சட்டம் - ஒழுங்கு, நிர்வாகத்தை மையமாக கொண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும். தமிழக வளர்ச்சி, நிர்வாக வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை மூன்றாக பிரித்து 3 மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

.மாநிலங்களை பிரிக்கும் முயற்சியை பிரிவினைவாதம் என எதிர்கடசிகள் சாயம் பூசுவது தவறு. நீண்ட நாட்களாக உள்ள இந்த கோரிக்கை குறித்து பிரதமர், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அண்ணா பேசிய கருத்துகள்தான் பிரிவினைவாதம். நாங்கள் முன்வைப்பது வளர்ச்சிக்கான கோரிக்கை என்று அர்ஜுன் சம்பக் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad