முடங்கியது "நீட்" தேர்வு இணையதளம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

முடங்கியது "நீட்" தேர்வு இணையதளம்..!

 முடங்கியது "நீட்" தேர்வு இணையதளம்..!


ஒரே நேரத்தில் அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், நீட் தேர்வு இணையதளம் முடங்கியது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற வேண்டிய சி.பி.எஸ்.இ., உட்பட 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இன்று மாலை முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயற்சித்ததால், நீட் தேர்வு இணையதளத்தின் சர்வர் முடங்கியது. இதனால், மாணவர்களால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை

No comments:

Post a Comment

Post Top Ad