தலைமை செயலகத்தில் ஒளிரும் "தமிழ் வாழ்க" பலகை!
ரிப்பன் மாளிகையை தொடர்ந்து தலைமை செயலகத்திலும் தமிழ் வாழ்க எனும் பெயர்ப்பலகை வண்ண அலங்காரத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தின் மீது இருந்த 'தமிழ் வாழ்க' பெயர் பலகை அ.தி.மு.க., ஆட்சியில் அகற்றப்பட்டது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்யவே தமிழ் வாழ்க பெயர் பலகை நீக்கப்பட்டதாகவும் அப்போதைய அதிமுக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆட்சி அமைந்த உடனே சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என இரண்டு பெயர் பலகைகளை மீண்டும் நிறுவியது. இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தமிழ் வாழ்க பெயர் பலகை நிறுவப்பட்டது. இதைப்போல அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் வாழ்க பெயர் பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment