சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்தில் எத்தனை பேர்?
தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 1,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25,53,805 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 2,394 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 24,98,289 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 33,995 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 8 பேரும், அரசு மருத்துவமனையில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 122 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 164 ஆக அதிகரித்துள்ளது. இதே போல், கோவை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று கோவையில் 179 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, 21 ஆயிரத்து 521 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment