ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - தேடி வரும் அரசு பணி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - தேடி வரும் அரசு பணி!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - தேடி வரும் அரசு பணி!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரசுப் பணியில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துறை அதிகாரிகள், துறை உதவி அதிகாரிகள் தகுதிக்கேற்ப காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒப்பந்த அடிப்படையில், ஓராண்டு அல்லது திட்டம் முடியும் வரை பணியாற்றலாம். இதற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்கவும், நிராகரிக்கவும் அமைச்சகத்திற்கு முழு அதிகாரம் உண்டு. வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேற்கண்ட தேதிக்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஒருபோதும் ஏற்கப்படாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad