கடவுளை மறுத்த கருணாநிதிக்கு சூடம் காட்டிய எம்எல்ஏ: சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழாவில் பெரும் அலப்பறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

கடவுளை மறுத்த கருணாநிதிக்கு சூடம் காட்டிய எம்எல்ஏ: சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழாவில் பெரும் அலப்பறை!

கடவுளை மறுத்த கருணாநிதிக்கு சூடம் காட்டிய எம்எல்ஏ: சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழாவில் பெரும் அலப்பறை!

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே சமுதாயக் கூடம் அடிக்கல் நாட்டு நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு சூடம் காட்டி வழிப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே ரூ 79 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிக்காக எம்எல்ஏ அஜெ மனிக்கண்ணன் அடிக்கல் நாட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட டி ஒரத்தூர் கிராமத்தில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கேவி முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக எம்எல்ஏ அஜெ மணிக்கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சமுதாய கூட கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூசை போட்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீசன் ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி, நஸ்ருள்ள, அம்மாசி, அருண்ராஜ் விஜி முருகானந்தம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad