தனியாரிலும் இலவச தடுப்பூசி திட்டம்... இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தொடக்கினார் ஸ்டாலின்!
கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வம் தமிழக மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தடு்ப்பூசி தட்டுப்பாட்டின் காரணமாக, பொதுமக்களின் ஆர்வத்துக்கு அரசால் ஈடுகொடுக்க முடியாததால் முகாம்கள் வாரத்தில் நான்கு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
முகாம்களில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொள்ள பொறுமையில்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
சிஎஸ்ஆர் (corporate social responsibility) நிதியுதவி மூலம் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment