அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்!


அதிமுக அவைத்தலைவராக இருந்து வருபவர் மதுசூதனன். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்த மதுசூதனன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருடன் கை கோர்த்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டார்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் மதுசூதனுக்கு உடல்நிலை குறைவு காரணமாக அவைத்தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. அவைத்தலைவர் பதவி ஜெயலலிதா தனக்கு கொடுத்தது என்று தெரிவித்த மதுசூதனன், நான் சாகும் வரை அவைத்தலைவர் பதவியில் தொடர்வேன் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad