ஈபிஎஸ் - ஓபிஎஸ் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு மனு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

ஈபிஎஸ் - ஓபிஎஸ் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு மனு

ஈபிஎஸ் - ஓபிஎஸ் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு மனு


அதிமுகவில் கடந்த 7 ஆண்டுகளாக உட்கட்சி தேர்தல் நடத்தாமல் தலைவர்களை நியமிக்கப்படுவதாகவும், அதன்படி உருவான ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோரது நியமனங்களை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் எனக்கோரி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான
எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
வழக்குத் தொடர்ந்துள்ள மனுதாரர் சூரியமூர்த்தி இன்றைய தேதியில் அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால் இந்த வழக்கைத் தொடர அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. வேறு சிலரின் தனிப்பட்ட நலனுக்காகக் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

முகத்தைக் காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து மனுதாரரை இயக்குகின்றனர். ஏற்கெனவே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு நிராகரிக்கப்பட்டு, பின்னர் அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சசிகலாவை நீக்கிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக உட்கட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வரும் டிசம்பர் மாதம் வரை அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனுதாரர் நிறைய தகவல்களை மறைத்துள்ளார். அவர் உறுப்பினர்தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. ஒரே கோரிக்கைக்குப் பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே, நிர்வாகிகள் நியமனத்திற்குத் தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad