முதல் நாளே டெல்லியில் கெத்து காட்டிய விஜய் வசந்த்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

முதல் நாளே டெல்லியில் கெத்து காட்டிய விஜய் வசந்த்!

முதல் நாளே டெல்லியில் கெத்து காட்டிய விஜய் வசந்த்!

கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால், காலியான அவரது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அதில், காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை தனது தந்தையை போலவே தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இதுவரை பதவியேற்றுக் கொள்ளாமலேயே இருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, கூட்டத்தொடர் தொடங்கியதும், இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்த வகையில், விஜய் வசந்த்தும் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, தமிழில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.“வசந்தகுமாரின் மகனாகிய விஜயகுமார் என்கிறத விஜய வசந்த் என்னும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள உள்ள கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன். பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க” என்று கூறி விஜய் வசந்த் பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.யான விஜய் வசந்த் தாய்மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழில் பதவியேற்றுக் கொண்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து புத்தகங்களை விஜய் வசந்த் பரிசாக அளித்துள்ளார்.

மறைந்த வசந்தகுமார் மிகவும் சுறுசுறுப்பாக அறியப்பட்டவர். காங்கிரஸ் கட்சியின் எந்த கோஷ்டியில் சிக்கிக் கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்குடையவர். அந்த வகையில், தனது தந்தையை போலவே, டெல்லிக்கு சென்ற முதல் நாளிலேயே தமிழில் பதவிப்பிரமாணம், தலைவர்களுடன் சந்திப்பு என பரபரப்பாக இயங்கி வருவதுடன், கட்சிக்குள்ளும் தந்தை வழியில் பயணிக்க தொடங்கியுள்ளார் விஜய் வசந்த்.

No comments:

Post a Comment

Post Top Ad