தமிழகத்தில் 2,000-க்கு கீழே குறைந்த கொரோனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

தமிழகத்தில் 2,000-க்கு கீழே குறைந்த கொரோனா!

தமிழகத்தில் 2,000-க்கு கீழே குறைந்த கொரோனா!


தமிழகத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு, 2 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, 2 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இன்று புதிதாக 1 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1 ஆயிரத்து 971 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,139 பேர் ஆண்கள், 832 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 147 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 2 ஆயிரத்து 558 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 76 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநில முழுவதும், 27 ஆயிரத்து 282 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad