கொங்குநாடு பரிசீலனை: மீண்டும் கொளுத்தி போட்ட வானதி சீனிவாசன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

கொங்குநாடு பரிசீலனை: மீண்டும் கொளுத்தி போட்ட வானதி சீனிவாசன்!

கொங்குநாடு பரிசீலனை: மீண்டும் கொளுத்தி போட்ட வானதி சீனிவாசன்!


தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து அதை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் திட்டம் இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. கொங்குநாடு பிரிவினைக்கு திமுக, அதிமுக, மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால், கொங்கு நாடு பிரிப்பு என்ற கருத்துக்கு ஆதரவாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் கொங்குநாடு புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை தெற்கு எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் இதற்கு ஆதரவான கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், அப்­படி ஒரு பிரி­வி­னையை பாஜக முன்­னெ­டுக்க­வில்லை என்று மாநில தலைமை கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டைக் தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. கொங்கு பகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சிகள் உள்ளிட்டவை இம்மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. எனவே வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி இம்மக்களின் கோரிக்கையைக் நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் கொடுக்கின்ற தடுப்பூசிகளை ஒரு சிலர் எடுத்து கொண்டு போய் தனியார் மருத்துவமனைக்கு கொடுப்பதாக தகவல் வருகிறது. அதற்கான ஆதாரத்தைக் திரட்டி வருகிறோம். இந்த விஷயத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். தகுந்த முறையில் வேகமாக தடுப்பூசிகளை மாநில அரசு செலுத்த வேண்டும் என்றும் அப்போது வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad