மாயமான ரஷ்ய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

மாயமான ரஷ்ய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!

மாயமான ரஷ்ய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!


ரஷ்யாவின் மாகாணத் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ச்கி விமான நிலையத்தில் இருந்து பழனா நகரத்துக்கு Antonov An-26 என்ற இரட்டை எஞ்சின் டர்போபிராப் ரக விமானம், 22 பயணிகள், விமான ஊழியர்கள் 6 பேர் என மொத்தம் 28 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தது. விமானத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

தரையிறங்கும் சிறிது நேரத்துக்கு முன்பாக, இந்த விமானமானது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. கம்சட்கா தீபகற்பத்தில் ரஷ்ய விமானம் திடீரென மாயமாகியதால், அதனை தேடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. விமானத்தை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. மீட்பு படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து, விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு ஏராளமான கப்பல்கள் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அவசரகால அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment

Post Top Ad