முதல்வருக்கு டாக்டர்கள் சங்கத்தினர் வைத்த கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

முதல்வருக்கு டாக்டர்கள் சங்கத்தினர் வைத்த கோரிக்கை!

முதல்வருக்கு டாக்டர்கள் சங்கத்தினர் வைத்த கோரிக்கை!

மருத்துவ கல்வியில் மத்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதலமைச்சரை மருத்துவர் சங்கங்கள் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மத்திய அரசு கடந்த 2007ஆம் ஆண்டு ஒபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உயர்கல்வி நிறுவனங்களில் அறிவித்த நிலையில் அவை கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு அந்த இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில் இதனால் சுமார் 16 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது போல இந்த ஆண்டும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு அந்தந்த மாநிலங்களில் நடத்த வேண்டும்.மத்திய அரசு இந்த ஆண்டு நடத்தும் என அறிவித்துள்ள நிலையில் அதற்கு மாநில அரசு தனது உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது” எனவும் தெரிவித்தார்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad