மக்களவை மாஸ்க்கில் 'மர்மம்': குரலை தடுக்க பலே திட்டம், கவலையில் எதிர்க்கட்சி எம்பி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

மக்களவை மாஸ்க்கில் 'மர்மம்': குரலை தடுக்க பலே திட்டம், கவலையில் எதிர்க்கட்சி எம்பி

மக்களவை மாஸ்க்கில் 'மர்மம்': குரலை தடுக்க பலே திட்டம், கவலையில் எதிர்க்கட்சி எம்பி

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பெகாஸஸ் மென்பொருள் மூலம் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், 'தி வயர்' உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் பெகாஸஸ் மென்பொருள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருவதால் இந்த விவகாரம் விசாரணையை நோக்கி நகர்கிறது.

மக்களவையில், பெகாசஸ் உளவு குறித்து தனி சிறப்பு விசாரணை உச்ச நீதிமன்றத்தினுடைய கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை வைத்து வருகின்றன. மேலும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருவதால் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு குறித்து கோஷமிடுவதை தடுக்க நாடாளுமன்ற அலுவலகம் மாஸ்க் யுக்தியை கையாளுவதாக
சு. வெங்கடேசன் எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதுகுறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், ''மக்களவை அலுவலகம் எம் பி களுக்கு நாடாளுமன்ற படம் அச்சிடப்பட்ட N-95 மாஸ்க் கொடுத்துள்ளது. அதனை அணிந்து கோஷம் போட்டால் சத்தம் வெளியில் கேட்பதில்லை. அவை கொரோனவை மட்டுமல்ல பெகாஸஸ் விசாரணைக்கான குரலை தடுப்பதற்கும் முயற்சிக்கிறது. எனவே, நாங்கள் சர்ஜிக்கல் மாஸ்கைத்தான் அணிகிறோம்'' என இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad