வெள்ளத்தில் மூழ்கும் ஒகேனக்கல்; விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி தான்!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை 10 மணிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் முழுமையாக ஒகேனக்கல் வந்தடைந்தது.
கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலம் குடகு ஆகிய காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து, இரு அணைகளும் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் தமிழகத்திற்கு செல்லும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
நேற்று முன்தினம் கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் இரு அணைகளிலிருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால், கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு நேற்று மதியம் முதல் படிப்படியாக வரத்துவங்கியது.
நேற்று மாலை 28 ஆயிரம் கன அடி நீரும் இன்று காலை 6 மணி நிலவரப்படி 30 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி கர்நாடகா அணைகளில் திறந்துவிடப்பட்ட 36 ஆயிரம் கன அடி நீர் முழுமையாக பிலிகுண்டுலுவிற்கு வந்தடைந்து.
No comments:
Post a Comment