ஊருக்குள் சுற்றிய தேனி கலெக்டர்: மக்களை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

ஊருக்குள் சுற்றிய தேனி கலெக்டர்: மக்களை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினார்!

ஊருக்குள் சுற்றிய தேனி கலெக்டர்: மக்களை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினார்!

தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்யத் தேனி ஆட்சியர் முரளீதரன் சென்றார். அப்போது செல்லும் வழியில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்திற்குள் சென்றார்.
அங்கிருந்த கடை ஊழியர்கள், பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள் ஆகிறார்களின் பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் மாஸ்க் அணியாமலுமிருந்ததை கண்டு ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அங்கிருந்தவர்களிடம் நேரடியாகச் சென்று கொரோனா நோய் பரவி வரும் நிலையில் தயவுசெய்து மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் எனப் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் நகராட்சி மற்றும் சுகாதார ஊழியர்களிடம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக அபராத தொகையை விதிக்குமாறு உத்தரவிட்டார். பேருந்து நிலையத்தில் திடீரென மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு நாள் மட்டும் 13 பேருக்கு கொரோனா நோய் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் சிகிச்சை முடிந்து 19 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது 177 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad