யாருகிட்ட, திமுகவின் ஆட்டம் பலிக்காது; எஸ்.பி.வேலுமணி ஆவேசம்!
கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்த திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே இந்த அரசை கண்டித்து வரும் 28ஆம் தேதி கவன ஈர்ப்பு உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பொய் வாக்குறுதிகளை கொடுத்து கோவை மாவட்டத்தில் வெற்றி பெற திமுக முயற்சித்தது.
50 ஆண்டுகால வளர்ச்சி
ஆனால் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கழகத்தை அனைத்து தொகுதிகளிலும் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். ஏனெனில் 50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம் என்றார்.
ஸ்டாலின் முதல்வரானதும் சேவை செய்வதாக கூறி கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த 96 சதவீத வளர்ச்சி பணிகளை நிறுத்திவிட்டார்.
வழக்குப் போடுங்கள் பார்க்கலாம்
இதன் காரணமாக குடிநீர் திட்டம், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிமுகவினர் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். முதலில் என் வீட்டில் தான் சோதனை செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். என் மீது என்ன வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். இப்படியெல்லாம் பொய் வழக்குப் போட்டு எங்களை பயமுறுத்த முடியாது.திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்குவதே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதைக் கண்டு கழகத்தினர் யாரும் பயப்பட வேண்டாம். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் வெல்வோம். திமுகவின் செயல்பாடுகளை இந்த இரண்டு மாதங்களில் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.
No comments:
Post a Comment