பெகாசஸ்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

பெகாசஸ்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் அதிரடி!

பெகாசஸ்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் அதிரடி!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின், என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென் பொருளை பயன்படுத்தி, இந்தியாவில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர்கள், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட, 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற இரண்டு அவைகளில் தொடர் அமளிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெகாசஸ் மென் பொருள் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமர் பட்டாச்சார்யா, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. லோகூர் ஆகியோர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பெகாசஸ் மென் பொருள் மூலம் நடைபெற்ற ஒட்டுக் கேட்பு விவகாரங்கள் குறித்து இந்த விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை ஆணையத்தை ஒன்றிய அரசு அமைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அந்தப் பணியை ஒன்றிய அரசு செய்யவில்லை. அதை நாங்கள் செய்கிறோம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad