அதிமுக கொடியுடன் சசிகலா என்ட்ரி... சட்டுனு கிளம்பிய ஈபிஎஸ்... அப்போலோ பரபரப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

அதிமுக கொடியுடன் சசிகலா என்ட்ரி... சட்டுனு கிளம்பிய ஈபிஎஸ்... அப்போலோ பரபரப்பு..!

அதிமுக கொடியுடன் சசிகலா என்ட்ரி... சட்டுனு கிளம்பிய ஈபிஎஸ்... அப்போலோ பரபரப்பு..!அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அதிமுக வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சசிகலா அப்போலோ சென்றார்.
முன்னதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்துள்ளார். இந்நிலையில், சசிகலா வருகையை அறிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து கிளம்பியுள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் அனுமதிக்க துளியும் வாய்ப்பில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்குள் இருக்கும்போதே சசிகலா அதிமுக கொடியுடன் என்ட்ரி கொடுத்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா என்று கேள்வி எழுந்துள்ளது. அப்போலோ விசிட்டிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ''மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவைத்தலைவர் மதுசூதனை சந்திக்க வந்ததாகவும், மதுசூதனன் நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் கூறினார். தொடர்ந்து பேசியவர், மதுசூதனின் உறவினரிடமும் நலம் விசாரித்தேன் என்றும் மதுசூதனையும் சந்தித்து பேசினேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என தமிழக டிஜிபியிடம் ஏற்கனவே அதிமுக புகார் தெரிவித்த நிலையில், அதிமுக கொடி கட்டிய காரில் அவர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தது கவனம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad