ஸ்டாலின் Vs வேலுமணி: டீலா, நோ டீலா? உள்ளாட்சி தேர்தலுக்குள் ஒரு சம்பவம் இருக்கு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

ஸ்டாலின் Vs வேலுமணி: டீலா, நோ டீலா? உள்ளாட்சி தேர்தலுக்குள் ஒரு சம்பவம் இருக்கு!

ஸ்டாலின் Vs வேலுமணி: டீலா, நோ டீலா? உள்ளாட்சி தேர்தலுக்குள் ஒரு சம்பவம் இருக்கு!


அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் தூசு தட்டப்படுகிறது என்ற தகவல் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு கொடுத்தார்
ஆனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி ஐபிஎஸ் கொண்டு வரப்பட்டார். ஒரு காலத்தில் அமித் ஷாவையே உள்ளே தள்ளிய இவரை கொண்டுவந்தது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியது.

கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததால் அதிமுக அமைச்சர்கள் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது திமுக ஆட்சிக்கு வந்து இரு மாதங்கள் முழுதாக முடிவடைந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைகள் வேகமெடுக்கின்றன.மொத்தம் எட்டு அமைச்சர்களுக்கு கட்டம் கட்டப்படுவதாக சொல்லப்படும் நிலையில் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகிய இருவரும் முன்னிலையில் உள்ளனர்.

கொங்கு மண்டலத்திலிருந்து அதிமுகவில் செல்வாக்கான நபர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வரும் வேலையை செந்தில் பாலாஜி முன்னெடுத்து வருகிறார். இதனால் பிற அமைச்சர்கள், நிர்வாகிகளை விட எஸ்.பி.வேலுமணியை மட்டும் ஊழல் புகாரில் டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது மூன்று மாதங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் ஒரு தகவல் வந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad