யானை தாக்கி கோவையில் ஒருவர் பலி: மக்கள் பீதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

யானை தாக்கி கோவையில் ஒருவர் பலி: மக்கள் பீதி!

யானை தாக்கி கோவையில் ஒருவர் பலி: மக்கள் பீதி!

கோவை மாவட்டத்தில் யானை தாக்குதலில் சிக்கி தோட்டக் காவலர்கள், ஊர் காவல் பணியிலிருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகிறது.

இந்த சூழலில் மதுக்கரை வனச்சரகம்,கோவைபுதூர் பகுதியில் யானை தாக்கி தனியார் குடியிருப்பு காவலாளி உயிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலை அடிவாரத்தில் உள்ள ராக் அண்ட் டோ குடியிருப்பில் காவல் பணியில் இருந்த அறிவொளி நகரை சார்ந்த முத்துச்சாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது ஒற்றை யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad