எஸ்பி வேலுமணி ஆதரவு அதிகாரிகள் மதுரைக்கும் வேலூருக்கும் தூக்கி வீசப்பட்டனர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

எஸ்பி வேலுமணி ஆதரவு அதிகாரிகள் மதுரைக்கும் வேலூருக்கும் தூக்கி வீசப்பட்டனர்!

எஸ்பி வேலுமணி ஆதரவு அதிகாரிகள் மதுரைக்கும் வேலூருக்கும் தூக்கி வீசப்பட்டனர்!


மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சமயபுரத்தில் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக பில்லூர் 3ஆவது குடிநீர் திட்டப்பணி ரூ.134 கோடி மதிப்பீட்டில் புதிய நீருந்து நிலையம் அமைப்பதற்கான பணியினை முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டிருந்தார். முன்னாள் அமைச்சர் பங்கேற்ற விழாவில் அவர் பூமி பூசை செய்து திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட 96 திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. இதனால் குடிநீர்,பாதாள சாக்கடை மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியினை அரசு துரிதப்படுத்த வேண்டும். அப்படி செய்வதால்தான் கொரோனா 3ஆவது அலை உயிரிழப்புகளின்றி கட்டுப்படுத்த முடியும். தடுப்பூசிகளை விரைந்து கொள்முதல் செய்து மக்களை காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் ஏகே செல்வராஜ், பிஆர்ஜிஅருண்குமார், அம்மன் அர்ஜூனன்,கேஆர் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ ஓகே சின்னராஜ், மாவட்ட கவுன்சிலர் பிடி கந்தசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் நித்யா நந்தகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் ரவீந்திரன்,கண்காணிப்புப் பொறியாளர் பூபதி, நிர்வாகப் பொறியாளர் விவேகானந்தன், உதவிப் பொறியாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு

அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த சூழலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் 2 பேர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகப்பொறியாளர் விவேகானந்தன் வேலூர் மாவட்டத்திற்கும், உதவிப்பொறியாளர் விஜயலட்சுமி மதுரை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad