ஆண்களுக்கு மிகவும் பிடித்த பெண்கள், எந்த ராசியில் இருக்கிறார்கள் தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

ஆண்களுக்கு மிகவும் பிடித்த பெண்கள், எந்த ராசியில் இருக்கிறார்கள் தெரியுமா?

ஆண்களுக்கு மிகவும் பிடித்த பெண்கள், எந்த ராசியில் இருக்கிறார்கள் தெரியுமா?


உலகில் படைக்கப்பட்ட விலங்குகளில் ஆண் விலங்குகள் மிகவும் அழகான படைப்புகளாக, அதற்கென தனித்துவமான விஷயங்கள் சேர்ந்தே படைக்கப்பட்டுள்ளன. அதாவது ஆண் மயில் பெண் மயிலை ஈர்க்க தோகை விரித்து ஆடுகிறது. சிங்கம் அதற்கான கம்பீரமும், கொண்டிருக்கின்றன.

ஆனால் மனிதர்களில் மிகவும் அழகானவர்களாக பெண்கள் இருக்கின்றனர். பெண் குழந்தை, மகள், மனைவி, தாய் என்பதைத் தாண்டி எல்லா விஷயங்களிலும் அழகாக இருக்கின்றனர்.

​எந்த ராசி பெண்கள் மிகவும் அழகாக, கவர்ச்சிகரமாக இருக்கின்றனர் தெரியுமா?

அந்த வகையில் எல்லா பெண்களும் இயற்கையாகவே அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். ஆனால் பல ஜோதிடர்கள் மற்றும் பத்திரிகைகளின் கூற்றுப்படி, மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான பெண்கள் மீனம், சிம்மம், கும்பம், துலாம், விருச்சிகம் போன்ற ராசியை கீழ் பிறப்பதாகக் கூறப்படுகிறது.இருப்பினும், வெவ்வேறு ஆதாரங்களையும், எதிர் பாலினத்தை ஈர்க்கக்கூடிய அவர்களின் ராசி அடிப்படையில் எவ்வளவு அழகான மற்றும் கவர்ச்சியான பெண் இருக்க முடியும்?, அவர்களின் அழகு, பண்புகளையும் காரணிகளாகக் கொண்டு அழகான பெண்களைக் குறித்து சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

​மீனம்

குருபகவானால் ஆளப்படக்கூடிய மீன ராசி பெண்கள் சற்று மர்மமானவர்கள். ஆண்களை எளிதில் ஈர்க்கக்கூடிய, வசீகரமானவர்கள். இதனால் மீன ராசி பெண்களை எளிதில் காதலிப்பார்கள்.

அழகும், கவர்ச்சி மட்டுமல்லாமல் இசை, நடனம், கலை, நீச்சல் அல்லது ஏதேனும் துறையிலும் திறமைகள் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். இந்த பண்பு அவர்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. அவர்கள் நிறைய அன்பையும் அரவணைப்பையும் கொண்டவர்களை இவர்கள் விரும்புவார்கள்.

மிகவும் உணர்ச்சிகரமான இவர்கள் எளிதில் சமநிலை அடைவார்கள். இவர்கள் சிற்றின்பம் மற்றும் பட்டு துணிகளை விரும்புகிறார்கள்.

கும்பம்


சனி பகவான் ஆளக்கூடிய கும்ப ராசியினர் சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை விரும்பக்கூடியவர்கள். கும்ப ராசி பெண்கள் தனித்துவமானவர்கள், இது ஆண்களை அதிகம் ஈர்க்கக்கூடியதாக அமைகிறது. இவர்கள் புதுமையான யோசனைகளைக் கொண்ட கூர்மையான மற்றும் பிரகாசமான மனம் கொண்டவர்கள் மற்றும் அணுகுமுறையில் தைரியமானவர்கள்.

இவர்களை காதலித்தால் அதன் முடிவை தன்னிச்சையாகவும், கணிக்க முடியாதவையாகவும் இருக்கும். இவர்களின் கவர்ச்சிகரமான உடல் மற்றும் மென்மையான வசீகரிக்கும் தோல் மற்றவர்களை ஈர்க்கும்.


No comments:

Post a Comment

Post Top Ad