ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு திருமா அட்வைஸ்: ப்ளீஸ் இதை மட்டுமாவது பண்ணுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 7, 2021

ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு திருமா அட்வைஸ்: ப்ளீஸ் இதை மட்டுமாவது பண்ணுங்க!

ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு திருமா அட்வைஸ்: ப்ளீஸ் இதை மட்டுமாவது பண்ணுங்க!


சுயநலத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அதிமுக இனியாவது விழித்துக்கொண்டு கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல்‌.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரட்டைமலை சீனிவாசன் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சமூக மாற்றத்திற்காக வித்திட்டவர். சாதி அடையாளங்களை ஒழித்து இன அடையாளத்தை காட்டியவர். தமிழக அரசியலில் திராவிடத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர். சாதி பெருமை பேசாமல் இன அடையாளத்தை முன்னெடுத்தவர்” என்று கூறினார்.

“அருட் தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டார்.மோடி அரசின் பிடிவாதத்தால் கொல்லப்பட்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் உயிர்ப்பிழைத்திருப்பார்.

பீமா - கொரேகான் வன்முறை வழக்கில் கைது செய்திருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்.சென்னை ஐஐடியில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஆதிக்கம் ஏற்கக்கூடியது அல்ல. பிஜேபி உடன் கூட்டணி அமைந்ததால் தான் அதிமுக படுதோல்வி அடைந்தது என தேர்தலுக்கு முன்னரே நான் தெரிவித்தேன். தங்களுடைய சுயநலத்திற்காக அதிமுக பிஜேபி உடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இனியாவது விழித்துக்கொண்டு கூட்டணியிலிருந்து விலக வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad