அடக்கொடுமையே... கொரோனாவால் இத்தனை ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்துட்டாங்களா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 7, 2021

அடக்கொடுமையே... கொரோனாவால் இத்தனை ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்துட்டாங்களா?

அடக்கொடுமையே... கொரோனாவால் இத்தனை ஆயிரம் குழந்தைகள் பெற்றோரை இழந்துட்டாங்களா?


தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் திருச்சி மாவட்ட மறு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தலைமையில் இன்றுநடைபெற்றது.

இதில் உறுப்பினர்கள் ராமராஜ், முரளிகுமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், திருச்சி காவல் துறை துணை ஆணையர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் சரஸ்வதி ரெங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படாத வகையில் மாவட்ட வாரியாக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக குழந்தைகள் பாதிக்காத வண்ணம் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

20 மாவட்டங்களில் இதுவரை குழந்தை இல்லங்களை ஆய்வும் மேற்கொண்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100க்கு மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93; யாராவது ஒருவரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,593. இதுதொடர்பான கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் குழந்தைகள் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரஸ்வதி ரெங்கசாமி கூறினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறும்போது, " கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கென 100 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வைத்துள்ளோம்.

குழந்தைகளுக்கான தனிப்பிரிவு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்" என்று சிவராசு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad