என்னது...புதுசா இத்தன பேருக்கு பாதிப்பா?; கிறுகிறுக்க வைக்கும் கொரோனா நிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 24, 2021

என்னது...புதுசா இத்தன பேருக்கு பாதிப்பா?; கிறுகிறுக்க வைக்கும் கொரோனா நிலவரம்!

என்னது...புதுசா இத்தன பேருக்கு பாதிப்பா?; கிறுகிறுக்க வைக்கும் கொரோனா நிலவரம்!

கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணம் அடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலன் இன்றி ஒருவர் உயிர் இழந்தார். தற்போதைய நிலவரப்படி, 193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கரூர் மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad