பள்ளிக் கட்டணம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

பள்ளிக் கட்டணம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பள்ளிக் கட்டணம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பள்ளி கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு பெற்றோர்களை தனியார் பள்ளிகள் நிர்பந்திப்பதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 75 சதவீத கட்டணத்தை 2 தவணையாக வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த வழக்கானது இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது தனியாா் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 85 சதவீதத்தை வசூலித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படமாட்டாா்கள். கட்டணச் சலுகை கோரும் மாணவா்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என வாதிட்டனர்.

ஆனால், உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்புக் கல்வியாண்டான 2021-2022-ஆண்டிலும், கடந்த 2019-2020 கல்வியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து கடந்த ஜூலை 5ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தமிழகத்துக்குப் பொருந்தாது. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்டண நிா்ணயக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத பள்ளிக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைசி தவணையை 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கொரோனா, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 75 சதவீத பள்ளி கட்டணம் செலுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad