விஜயகாந்த், கனிமொழி உள்ளிட்டோரின் அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட உத்தரவு - முதல்வர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

விஜயகாந்த், கனிமொழி உள்ளிட்டோரின் அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட உத்தரவு - முதல்வர்

விஜயகாந்த், கனிமொழி உள்ளிட்டோரின் அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட உத்தரவு - முதல்வர்

அரசியல் பிரமுகர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள 130 க்கும் மேலான அவதூறு வழக்குகளை கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுகளுக்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர்
விஜயகாந்த் மற்றும் பிரேமலதா, காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் மற்றும் விஜயதரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிஷருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள் பழ. கருப்பையா மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர்

மேலும், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன், திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவாளர்கள் கே.என். நேரு மற்றும் நாசர், எம்பி கனிமொழி, திருவாளர்கள் தயாநிதி மாறன், ஆர்.எஸ். பாரதி, எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் திமுக தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் மீதும் சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.


அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அணைத்து அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad