மகேந்திரனுக்கு பதில் யார்? மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெண்ணை டிக் அடிக்கும் கமல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

மகேந்திரனுக்கு பதில் யார்? மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெண்ணை டிக் அடிக்கும் கமல்!

மகேந்திரனுக்கு பதில் யார்? மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெண்ணை டிக் அடிக்கும் கமல்!


மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் கோவை முகமாக திகழ்ந்தவர் மகேந்திரன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு 36,655 வாக்குகளை பெற்றார். அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் 10,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதன் மூலம் திமுகவின் தோல்விக்கு அவரும் ஒரு காரணமாக விளங்கினார்.

அந்த அளவுக்கு கோவை பகுதியில் தொழிலதிபரான மகேந்திரன் செல்வாக்குள்ள நபராக இருப்பவர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் கோவை முகமாக இருந்த மகேந்திரன் திமுகவுக்கு சென்றுவிட்டதால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருக்கு மாற்றாக பெண் தொழிலதிபரும், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான அனுஷா ரவியை களமிறக்க

கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகேந்திரன் திமுகவுக்கு சென்ற போது பத்மபிரியா உள்ளிட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் அழைத்து சென்று விட்டார். அப்போது, அனுஷா ரவிக்கும் மகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், மகேந்திரனின் அழைப்பை ஏற்க மறுத்த அனுஷா ரவி மநீமவிலேயே தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

இந்த தகவல் கமலின் காதுகளுக்கு சென்றதால் மகிழ்ச்சியடைந்த அவர், அனுஷாவை சென்னைக்கு நேரில் அழைத்தும் அலோசனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது, அவரை பாராட்டிய கமல்ஹாசன், கோவையில் மகேந்திரனுக்கு மாற்றாக செயல்பட வேண்டும் எனவும், கட்சியை வளர்க்க துடிப்பாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக மநீம வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad