நீட் பாதிப்பு ஆய்வுக்குழு செல்லும்: பாஜகவின் மனு தள்ளுபடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

நீட் பாதிப்பு ஆய்வுக்குழு செல்லும்: பாஜகவின் மனு தள்ளுபடி!

 நீட் பாதிப்பு ஆய்வுக்குழு செல்லும்: பாஜகவின் மனு தள்ளுபடி!


ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கு தடை விதிக்க கோரிதமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் மீது விசாரனை நடத்திய நீதிமன்றம், நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக தமிழக அரசு செயல்பட முடியாது என்று தெரிவித்ததுடன், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு அனுமதி பெற்றதா என்று கேள்வி எழுப்பி, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.

அதன்பேரில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழுவை நியமிக்க முடியாது என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தது. இக்குழுவை அமைக்க அதிகாரம் உள்ளதாகவும், பாதிப்புகளை அறியவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.



இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆய்வு குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும். ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என்று கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது செல்லும் என்று உத்தரவிட்டது.

மேலும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும். மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது . இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பானை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.



இதையடுத்து, நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த குழுவுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad