டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் திருச்சி வீரர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் திருச்சி வீரர்கள்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் திருச்சி வீரர்கள்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் 4X400 மீட்டர் ஓட்ட பந்தய பிரிவில் திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கியராஜு, குண்டூரை சேர்ந்த தனலட்சுமி சேகர், திருவெறும்பூரை சேர்ந்த சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று பேர் பங்கேற்க உள்ளனர்.


இந்த தகவலை இந்திய தடகள சம்மேளனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து திருச்சியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது.

தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் பங்கேற்க உள்ள 5 வீரர்களில், 3 பேர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று தங்கம்,, வெள்ளி, வெண்கல பதக்கம் பெறும் தமிழக வீரர்களுக்கு முறையே 3 கோடி, 2 கோடி, 1 கோடி பரிசு வழங்க இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad