சசிகலாவை இப்படியா பேசினார் எடப்பாடி? ஓபிஎஸ் இனி காட்டுவாரா அதிரடி?
அதிமுகவில் இரட்டை தலைமை பஞ்சாயத்தே சத்தமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்க, மூன்றாவதாக சசிகலாவும் உள்ளே நுழைய நாள் பார்த்து ஆள் பார்த்து வருகிறார்.
சசிகலா ரீ என்ட்ரி உறுதி!
சசிகலா தான் நிச்சயமா வருவேன் என அதிமுக தொண்டர்களுக்கு போன் போட்டு பேசிவருகிறார். சசிகலாவின் வருகை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் ஒரே முடிவில் இருப்பதாக கட்சி சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் சொன்னாலும் ஆளுக்கொரு திசையில் பயணிப்பதாகவே களநிலவரங்கள் கூறுகின்றன.
ஓபிஎஸ் மௌனம் ஏன்?
எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் சசிகலாவை கடுமையாக விமர்சித்து பேசும் நிலையில் பன்னீர்செல்வமோ வெளிப்படையாக எதிர்த்துப் பேசாமல் மௌனம் காத்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்களா, இல்லையா என்பதே வெளியில் தெரியாமல் உள்ளது.
No comments:
Post a Comment