சில்லாக்கி டும்மா; சரக்கை போட்டு சலம்பிய பெண்: மழையில் சடுகுடு ஆட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

சில்லாக்கி டும்மா; சரக்கை போட்டு சலம்பிய பெண்: மழையில் சடுகுடு ஆட்டம்!

சில்லாக்கி டும்மா; சரக்கை போட்டு சலம்பிய பெண்: மழையில் சடுகுடு ஆட்டம்!

மதுப்பழக்கம் நாட்டுக்கும், உடல் நலத்துக்கும் கேடு என்று எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மதுபோதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை.

ஒருவர் மது அருந்தியதும் அவருடைய மனம் இறுக்கமின்றித் தளர்வடைகிறது, அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். மது அருந்தியதும், ஒருவருடைய மனத்தடைகள் விலகுகின்றன. அதனால், அவரது அசைவுகளில்/நடத்தைகளில் ஒழுங்கு குறைகிறது. ஒருவர் மதுவுக்கு அடிமையாகிறார் என்றால், அவரது மூளை தொடரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

துரதிருஷ்டவசமாக ஆண், பெண் இருவருமே மதுபோதைக்கு அடிமையாகி வருகின்றனர். மது போதை தனிமனிதனை மட்டும் பாதிக்கவில்லை. சுற்றியுள்ள சமுதாயத்தையும் பாதிப்படைய செய்கின்றது. அந்த வகையில், மதுபோதையில் பெண் ஒருவர் சலம்பல் செய்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் தமோ நகரில், மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் சாலையின் நடுவே வந்து ஆட்டம் ஆடியும், போகிற வருபவர்களை வம்பிழுத்து, உரண்டையும் இழுத்துள்ளார். சுமார் பல மணி நேரம் அப்பெண் அவ்வாறு செய்து வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. பலர் அப்பெண்ணை கண்டு அஞ்சி வேறு பக்கமாக வண்டியை திருப்பிக் கொண்டு சென்று விட்டனர். அந்த சமயத்தில், திடீரென மழைப் பொழிவு ஏற்பட்டும், அவரது போதை குறையவில்லை. மாறாக, மழையில் மகிழ்ச்சியாக அவர் ஆட்டம் போடத் தொடங்கி விட்டார்.

அவரது செயல்பாடுகளை தவிர்க்க அப்பகுதியில் போலீசாரும் இல்லை. அப்பெண்ணை தடுக்க யாரும் முன்வரவும் இல்லை. இறுதியாக, போதை தெளிந்ததும் அப்பெண்ணே தனது உடமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad