சி.ஏ.ஏ., எப்போது அமல்? - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

சி.ஏ.ஏ., எப்போது அமல்? - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

சி.ஏ.ஏ., எப்போது அமல்? - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!


சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சகம் அவகாசம் கோரி உள்ளதால், இந்த சட்டம் அமல்படுத்தப்படுவது தாமதமாகும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் பாகிஸ்தான், வங்க தேசம், ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத இந்து, சீக்கியர், சமணம், பௌத்தம், பார்சி, கிறிஸ்தவர் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad