ஆபாச பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

ஆபாச பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி!

ஆபாச பட வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஜாமின் மனு தள்ளுபடி!

ஆபாசப் பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழில், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, ராஜ் குந்த்ராவை, சில நாட்களுக்கு முன்பு மும்பை போலீசார் கைது செய்தனர்.

ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக தனி செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை எடுக்கவில்லை என்றும், பாலியல் கிளர்ச்சியூட்டக் கூடிய படங்களை மட்டுமே எடுத்தார் என்றும் தெரிவித்தார். அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிலையில், ராஜ் குந்த்ராவிடம் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் அவருக்கு எதிராக அப்ரூவர் ஆகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜாமின் கோரி மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர், ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர், ராஜ் குந்த்ரா என்ன பயங்கரவாதியா? என்று கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ராஜ் குந்த்ராவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad