'எடியூரப்பாவிற்கு ஆணி தரமான உரிய பதிலை முதல்வர் அளிப்பார்' - துரைமுருகன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 3, 2021

'எடியூரப்பாவிற்கு ஆணி தரமான உரிய பதிலை முதல்வர் அளிப்பார்' - துரைமுருகன்

'எடியூரப்பாவிற்கு ஆணி தரமான உரிய பதிலை முதல்வர் அளிப்பார்' - துரைமுருகன்


கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் விவகாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேகதாது அணையை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் உபரிநீர் கிடைக்காமல் போய்விடும் என்ற நிலையில் அந்த திட்டத்துக்கு தமிழகத்தில் நீண்டகாலமாக எதிர்ப்பு இருந்து வருகிறது.


இதற்கு மத்தியில் ஜூலை 17ம் தேதி டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை, மேகதாது அணை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துவிட்டு வந்தார். ஆனால், அணை கட்டுவதில் இருந்து பின்வாங்குவதை விரும்பாத கர்நாடக அரசு இன்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் பரபரப்பாக பேசப்படுகிறது.

அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதால் தமிழகம் பாதிக்காது என்றும் மாறாக இரு மாநிலங்களும் அதனால் பயன்பெறும் என்றும் கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்காது என நம்புகிறோம்.

இரண்டு மாநில அதிகாரிகள் ஆலோசனைக்கு தயார் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஆணி தரமான உரிய பதிலை அளிப்பார்'' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad