கர்நாடக முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை! - நாளை பதவியேற்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

கர்நாடக முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை! - நாளை பதவியேற்பு!

கர்நாடக முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை! - நாளை பதவியேற்பு!

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நாளை காலை 11 மணிக்கு
பசவராஜ் பொம்மை பதவி ஏற்க உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பா.ஜ.க. - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா ஆகியோருடனான சந்திப்புக்கு பிறகு, முதலமைச்சர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து அவர் வழங்கினார். இதை அடுத்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் அனல் பறக்க தொடங்கியது.

கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க, கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்க, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷான் ரெட்டி ஆகியோரை பெங்களூருக்கு பா.ஜ.க. மேலிடம் அனுப்பியது.

இன்று மாலை பா.ஜ.க., தலைமை அலுவலகத்தில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷான் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவருக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதை அடுத்து கர்நாடக பா.ஜ.க., சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி பசவராஜ் பொம்மை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்படி, நாளை காலை 11 மணிக்கு, கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க வரும்படி, பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad