தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்..! எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த செம்மொழி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்..! எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த செம்மொழி!

தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்..! எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த செம்மொழி!

நாடாளுமன்றத்தில், தமிழ் மொழியால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து ஒரே குரலில் சங்கமித்த ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், புதிதாக வெளி வந்துள்ள பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை, நாடாளுமன்ற இரண்டு அவைகளில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றன.

இதன் காரணமாக மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால், இரண்டு அவைகளுமே ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற வரலாற்றில், முதன்முறையாக, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தமிழ் மொழியில் முழக்கத்தை எழுப்பியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களில், "வேண்டும்...! வேண்டும்..! விவாதம் வேண்டும்...! என்றும், வேண்டும்...! வேண்டும்..! நீதி வேண்டும்...! என்றும் நாடாளுமன்ற இரண்டு அவைகளிலுமே முழக்கத்தை எழுப்பி உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
வழக்கமாக, நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் முழக்கங்கள் எழுப்பப்படும். மாநிலங்களவை வரலாற்றில் முதன் முறையாக, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தமிழ் மொழியில், வேண்டும்.. விவாதம்... வேண்டும் என முழக்கமிட்டனர். வலுக்கட்டயாமாக எந்தவொரு மசோதாவையும் தாக்கல் செய்வதற்கு முன்பு விவாதம் வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல், மக்களவையில், பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி., ஜஸ்பிர் சிங் கில் தலைமையில் திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும்..! என முழக்கமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad