பிரதமர் மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

பிரதமர் மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை!

பிரதமர் மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை!

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், புதிதாக வெளிவந்துள்ள பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை, நாடாளுமன்ற இரண்டு அவைகளில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றன. இதன் காரணமாக மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நாளை பிற்பகல் 1 மணி அளவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய மசோதா மற்றும் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad