முன்னாள் முதல்வர்கள் என்றும் பாராமல்... இபிஎஸ், ஓபிஎஸ்ஸை மரண கலாய் கலாய்த்த புகழேந்தி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

முன்னாள் முதல்வர்கள் என்றும் பாராமல்... இபிஎஸ், ஓபிஎஸ்ஸை மரண கலாய் கலாய்த்த புகழேந்தி!

முன்னாள் முதல்வர்கள் என்றும் பாராமல்... இபிஎஸ், ஓபிஎஸ்ஸை மரண கலாய் கலாய்த்த புகழேந்தி!

அதிமுகவிலிருந்து அண்மையில் விலக்கப்பட்ட கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அப்பாவு, தற்போது சபாநாயகராக பொறுபேற்றுள்ளார். அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்.

ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகிய இருவரும் அதிமுகவை விற்பதற்கு டெல்லி வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றி கொள்ள டெல்லி தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கட்சியை காப்பாற்ற அல்ல. தங்கள் அடிமை வாழ்வை தொடர இருவரும் டெல்லி வீதிகளில் சுற்றி வருகின்றனர்.

அதிமுக மீட்டெடுக்கப்பட முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் மிகவும் மோசமான சிக்கி கொண்டுள்ளது.. மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும்.

சசிகலா அழைத்தால் அவருடன் பேசுவதற்கும், அவரை பார்ப்பதற்க்கும் தயாராக இருக்கிறேன். சசிகலாவால் தான் இந்த கட்சியை காப்பாற்ற முடியும். ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆல் கட்சியை காப்பாற்ற முடியாது.

இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. பெரியார் பெயர் வைத்து வளரந்தவன நான். திராவிட இயக்க சிந்தனையில் என்னுடைய செயல்பாடு இருக்கும். விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன் என்று புகழேந்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad