இன்டெர்வியூ எடுத்தவருக்கு கொரோனா: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனிமைப்படுத்திக்கொள்வாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

இன்டெர்வியூ எடுத்தவருக்கு கொரோனா: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனிமைப்படுத்திக்கொள்வாரா?

இன்டெர்வியூ எடுத்தவருக்கு கொரோனா: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனிமைப்படுத்திக்கொள்வாரா?

யூ டியூப் சேனலின் தொகுப்பாளரான ஆவுடையப்பன் அரசியலின் முக்கிய புள்ளிகளை நேர்காணல் நடத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார். இவரது வீடியோக்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் இவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், திமுக எம்பி கனிமொழி ஆகியோரை அண்மையில் நேர்காணல் நடத்தி வீடியோ வெளியிட்டார்.
அதில், அமைச்சர் மா. சுப்ரமணியனுடன் எடுத்த வீடியோ மூன்று நாட்களுக்கு முன்புதான் யூ டியூபில் வெளியானது. அதில் அமைச்சர் சுப்ரமணியன் தமது வீட்டு மாடியில் நடை பயிற்சி செய்துகொண்டே , ஆவுடையப்பன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார்.

வித்தியாசமாக இருந்த அந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில், தொகுப்பாளர் ஆவுடையப்பன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்,'' நண்பர்களே,எனக்கு Covid19 தொற்று உறுதி ஆகி இருக்கிறது, என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் சோதனை/தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்!'' என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆவுடையப்பனின் அமைச்சர் மா. சுப்ரமணியனுடனான நேர்காணல் சில நாட்களுக்கு முன்பே எடுக்க பட்டிருந்தால் அமைச்சர் கட்டாயம் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம்.

மேலும், கடந்த சில நாட்களில் இவரது நேர்காணலில் கலந்துகொண்ட அரசியல் புள்ளிகள் யார் யார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. அதே சமயம், யூ டியூபர் ஆவுடையப்பன் விரைந்து குணமாக நெட்டிசன்கள் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad