'அகழாய்வு தேவையா'? துக்ளக் செய்திக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த பதிலடி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

'அகழாய்வு தேவையா'? துக்ளக் செய்திக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த பதிலடி..!

'அகழாய்வு தேவையா'? துக்ளக் செய்திக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த பதிலடி..!

திருப்புவனம் அருகே கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. முதல் மூன்று கட்ட அகழாய்வு ஒன்றிய அரசின் தொல்லியல் துறையினாலும், அடுத்த 3 கட்ட அகழாய்வு மாநில அரசின் தொல்லியல்துறையின் மூலம் நடந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மூலமாக கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது என தெரியவந்தது. கீழடியின் 6 ஆவது கட்ட ஆராய்ச்சி மூலம் 14 ஆயிரத்து 535 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், '' தமிழகத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் கண்ட கண்ட இடங்களில் அரசு தொல்பொருள் ஆய்வை முடுக்கி விட்டுள்ளதாக துக்ளக் செய்தி இதழில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கே தோண்டினாலும், பழைய மண்பானையும், எலும்புக்கூடுகளும்தான் கிடைக்கின்றன. ஏதோ கூர்மையான கல்லாயுதம் கிடைக்கிறது.

என்ன செய்ய?

இதையெல்லாம் வைத்து என்ன செய்ய? இவற்றையெல்லாம் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து, ஊர் உலகத்துக்கு காட்டினாலும், தமிழனின் வயிறு நிறையுமா/ கொரோனாதான் விலகுமா? இப்போது தமிழனின் வரலாற்றையும், அவனது கலாச்சாரத்தையும் தோண்டி எடுப்பதா இன்றைய வாழ்வின் பிரச்சினை தீர வழி?'' என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் பிரச்சினை தீருமா?

இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றியுள்ள நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டரில், '' பத்திரிகையாளர் குருமூர்த்தி இந்த கட்டுரையின் பின்னணி என்ன? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி நேரத்தை வீணடிப்பதாக கூறுகிறீர். இதனால் சாதாரண மனிதனுக்கு எந்த பயனும் இல்லை என சொல்கிறீர்கள் என்றால் ராமர் கோயில் கட்டுவதாலும் குஜராத்தின் ஒற்றுமை சிலையாலும் இந்தியாவின் பிரச்சினை தீருமா?'' என கேள்வி எழுப்பியுள்ளளார்.

முன்னதாக துக்ளக் செய்திக்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, '' இத்தகைய அகழாய்வு தேவையற்றது என்று சில வேலையற்றவர்கள் எழுதுவது பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு வேண்டுமானால் வயிறு நன்றாக எரியட்டும். பேரறிஞர் அண்ணா கூறியதை போல தமிழ் நாகரிக பண்பாட்டு தீ அகிலமெல்லாம் பரவட்டும். தொண்டர்ந்து நாங்கள் இந்த அகழாய்வுகளை மேற்கொள்வோம். தமிழ் பண்பாட்டு சூழலில் நாம் எடுத்துருக்கிற இந்த முயற்சியை கொச்சை படுத்துபவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். நம் பெருமைகளை உரத்துச் சொல்வதிலே பெருமையடைகிறோம்'' என அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad