ரயில் பயணிகளுக்கு மெகா அறிவிப்பு; வாரிக் கொடுக்கும் ரயில்வே நிர்வாகம்!
தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் சூழலில், சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் தேவையை கருதி உத்தரப் பிரதேசம், பிகார், அசாம், திரிபுரா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் சிறிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் சேவை அதிகரிப்பு
சமீபத்தில் தாம்பரத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் சில்ஹாத் நகருக்கு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திரிபுராவிற்கும், விழுப்புரத்தில் இருந்து புருலியாவிற்கும் (காட்பாடி/ ஜோலார்பேட்டை வழி), சென்னையில் இருந்து கோரக்பூருக்கும் (காட்பாடி வழி) ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
நிரம்பி வழியில் முன்பதிவு
இந்த ரயில்களின் மொத்த பயண நேரம் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆனாலும் பயணிகளுக்கு திருப்திகரமான சேவையை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு பட்டியல் நிரம்பியோ அல்லது காத்திருப்போர் பட்டியலுடனோ காணப்படுகிறது
No comments:
Post a Comment