மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என்ற தனித் துறை கடந்த 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கிட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment